பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவை அழிக்கிறார்: கமல் மீது மன்சூர் அலிகான் குற்றச்சாட்டு!
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிகளுக்கு கூட்டம் வருவதில்லை...
கோலி சோடா படத்தில் நடித்த கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ள படம் - உறுதி கொள். கதாநாயகியாக மேகனா நடித்துள்ளார். இயக்கம் - அய்யனார்.
இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் மன்சூர் அலிகான் பேசியதாவது:
திரையரங்கில் படம் பார்ப்பது மட்டுமே சினிமாவுக்குச் சிறப்பு. அதுதான் சினிமாவை வாழ வைக்கும். சினிமாவை அழிக்க வெளியிலிருந்து யாரும் வருவதில்லை. திரையுலகினர்தான் சினிமாவை அழிக்கிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கு பெறுகிறார். அரசாங்கத்தின் நூறு நாள் வேலை திட்டம் மாதிரி கஷ்டப்படுகிற சினிமா கலைஞர்களுக்கு அந்த டி.வி படி அளக்கிறது. அவங்க கஷ்டம் தீரட்டும், பரவாயில்லை. ஆனால் கமல் போன்ற ஒரு சாதனைக் கலைஞர் இதுமாதிரியான நிகழ்ச்சியில் பங்குபெறுவதன் மூலம் சினிமாவை அழிக்கக் காரணமாக இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியால் மாலை காட்சி, இரவு காட்சிகளுக்கு கூட்டம் வருவதில்லை. அதே நிகழ்ச்சி மறுநாள் காலை ஒளிபரப்பாகிறது அதனால் காலைக் காட்சிகளுக்கும் கூட்டம் வருவதில்லை. இதனால் எல்லாக் காட்சிகளும் பாதிப்படைந்துள்ளன.
Advertisement
Advertisement
நாளை கமல் படம் வெளிவரும்போது அஜீத்தோ, விஜய்யோ இதுபோன்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று, அதனால் தன்னுடைய படத்தின் வசூல் பாதித்தால் என்னவாகும் என கமல் யோசிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.