FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இரு வாரங்களில் 3,000 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் மீது நடவடிக்கை: காஷ்மீர் காவல்துறை

இரு வாரங்களில் காஷ்மீர் மண்டல காவல்துறை 3,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்திருப்பது பற்றி...

2 நவம்பர் 2026, 1:34 pm
காஷ்மீர்.
பகிர்:

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, கடந்த இரு வாரங்களில் காஷ்மீர் மண்டல காவல்துறை 3,000-க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரி ஒருவர் திங்கள்கிழமை தெரிவித்தார்.

காஷ்மீர் மண்டலத்தின் 10 மாவட்டங்களில் சுமார் 1,800 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் ஓட்டியதற்காக 500-க்கும் மேற்பட்ட வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் மூவர் பயணம் செய்ததற்காக 450 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

"அக்டோபர் 17-ஆம் தேதி முதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுதல் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பிற போக்குவரத்து விதிமீறல்கள் என மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன" என்று காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே போக்குவரத்து காவல்துறை வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வுப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Kashmir Zone Police has taken action against 3,000 traffic violation cases over the past two weeks as part of a road safety campaign, an official said on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments