சிறந்த நடிகருக்கான விருது பெற்றதில் பொறுப்பு அதிகரித்துள்ளது: விமல் நெகிழ்ச்சி!
இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது...
தமிழ்த் திரைப்படத் துறையில் சிறந்த படம், நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று அறிவித்தார். 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான விருதுகளின் பெயர்ப் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வாகை சூட வா படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்ற நடிகர் விமல் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
2009ம் வருடத்தின் சிறந்த படமாக ‘பசங்க’ படமும், 2010ம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக ‘களவாணி’ படமும் 2011ம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருது பெற்றுள்ளன. மேலும் 2014ஆம் வருடத்துக்கான சிறந்த இயக்குனருக்கான விருது ‘மஞ்சப்பை’ பட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நான்கு படங்களிலும் நானும் ஓர் அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமை அடைகிறேன்.
Advertisement
Advertisement
‘வாகை சூடவா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியையும் எனது பொறுப்பையும் இன்னும் அதிகரித்துள்ளது. இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு முழு காரணமான எனது இயக்குனர்களான பாண்டிராஜ், சற்குணம் மற்றும் ராகவன் ஆகியோருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.