முகப்பு
செய்திகள்

பரணி பாணியில் ஓவியாவும் வெளியேற்றமா? ரசிகர்களைப் பதறவைக்கும் பிக் பாஸ் விளம்பரம்!

ஓவியா நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிப்பாரா என்பது இன்றைய நிகழ்ச்சியில்... 

Updated On : 21 ஜூலை 2017, 2:52 pm IST
பகிர்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளார். தனக்குத் தோன்றியதைச் செய்தும் பேசியும் வருவதால் அவருக்கென நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகமாகிக்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த சில நாள்களாக இந்நிகழ்ச்சியில் ஓவியாவுக்கும் காயத்ரி-நமீதா ஆகியோருக்கும் இடையே ஏராளமான கருத்துமோதல்கள் உருவாகிவருகின்றன.

இது தற்போது உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. அதன் அடிப்படையில் நிகழ்ச்சியில் உள்ள 10 பேரில் ஓவியாவைத் தவிர அனைவரும் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

ஓவியா, சிலரைத் தூண்டிவிட்டு சண்டையை உருவாக்குகிறார் என்று நடிகர் சக்தி, பிக் பாஸ் நிர்வாகத்திடம் முறையிடுவதாகவும் அனைவரும் வெறுக்கும் ஒருவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறவேண்டும் என்று ஜூலி சொல்வதும் விளம்பரத்தில் காண்பிக்கப்படுகின்றன. ஒன்று ஓவியா நிகழ்ச்சியில் இருக்கவேண்டும், அல்லது நாங்கள் வெளியேறுகிறோம் என்றும் விளம்பரத்தில் சக்தி சொல்கிறார். கூடவே ஓவியா தனிமையில் அழுவதும் விளம்பரத்தில் காண்பிக்கப்படுவதால் சமூகவலைத்தளத்தில் உள்ள ஓவியா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் மற்றொரு விளம்பரத்தில் ஓவியா, காயத்ரி ரகுராம் இடையேயான மோதலும் காண்பிக்கப்படுகிறது.

இதனால் பரணி போல ஓவியாவும் இந்த நிகழ்ச்சியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனால் ஓவியாவும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவாரா என்கிற கேள்வியும் எழுகிறது. இதனால் இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவியா நிகழ்ச்சியில் தொடர்ந்து நீடிப்பாரா என்பது இன்று தெரிந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments