கமல் படத்துடன் போட்டியிடும் 3 படங்கள்!
இந்தப் படம் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9 அன்று வெளியாகவுள்ளது...
கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் 2 படத்தில் பூஜா குமார், ஆண்டிரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், வஹீதா ரஹ்மான், நாசர் போன்றோர் நடித்துள்ளார்கள். தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக உருவாக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் 2 படம், தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆக, ஒரே நாளில் மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் 2 படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இசை - ஜிப்ரான், பாடல்கள் - வைரமுத்து, கமல். இந்தப் படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இந்த வாரம் கமல் படத்துடன் 3 படங்கள் போட்டியிடவுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஹரிஷ் கல்யாண் - ரைசா இருவரும் ஜோடியாக நடித்துள்ள படம் - பியார் பிரேமா காதல். பாகுபலி 2 படத்தை வெளியிட்ட கே கே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தோடு இணைந்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஓய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. முழுக்க முழுக்க காதலை களமாக கொண்டு இப்படத்தை இளன் எழுதி இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவு, யுவன் ஷங்கர்ராஜா இசை.
Advertisement
Advertisement
இந்தப் படம் ஒருநாள் முன்னதாக ஆகஸ்ட் 9 அன்று வெளியாகவுள்ளது. மேலும் ஆகஸ்ட் 10 அன்று அழகுமகன், காதல் எனக்கு ரொம்ப பிடிக்கும் ஆகிய இரு சிறிய படங்களும் வெளியாகவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.