இணையத்தில் கசிந்த "காலா" பட சண்டைக்காட்சி: அதிர்ந்த படக்குழுவினர்!
விரைவில் வெளியாகவுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் "காலா" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
சென்னை: விரைவில் வெளியாகவுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் "காலா" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
'கபாலி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'காலா' என்கிற 'கரிகாலன்'. தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
Advertisement
Advertisement
இப்படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது என்று இரு தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் ட்வீட் செய்தோருந்தார்.
இந்நிலையில் "காலா" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். சுமார் அரை நிமிடம் ஓடும் அந்த விடியோவில் ரஜினிகாந்த் ஸ்டாண்ட் நடிகர் ஒருவரை தாக்குகிறார்.
இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள அதே வேளையில் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
அந்த விடியோ:
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.