முகப்பு
செய்திகள்

நடிகர் சிவகார்த்திகேயனின் ரசிகர் அப்படி என்ன ஆசைப்பட்டார்?

பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

Updated On : 25 ஜூன் 2018, 5:26 pm IST
பகிர்:

பொன்ராம் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி வரும் ‘சீமராஜா’ படத்தின்  இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ஜூன் 19-ம் தேதியுடன் முழுவதும் நிறைவடைகிறது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் சமந்தா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். சிம்ரன், நெப்போலியன், சூரி, யோகிபாபு, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

சீமராஜா விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் செப்.13-ம் தேதி வெளிவரும். இந்தச் செய்தி சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர்கள் வெளியிடப்படும் என்றனர் படக்குழுவினர். அண்மையில் நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார் சிவகார்த்திகேயன்.

சீமராஜா படத்தை ஆவலுடன் ரசிகர்கள் எதிர்ப்பார்த்துவரும் நிலையில், சிவகார்த்திகேயனின் ரசிகர் ஒருவர் பதிவிட்ட ட்வீட் அவரை நெகிழ்ச்சிக்குள்ளாகியது.

Advertisement

Advertisement

அந்த ரசிகருக்கு சொந்தமாக ஒரு லாரி வாங்கி அதில் சிவகார்த்திகேயனின் படப் பெயரை பெயிண்ட் செய்து ஓட்ட வேண்டும் என்று ஆசை. அது நிறைவேறியது என்று ட்வீட் செய்ய அதற்கு தன்னுடைய வாழ்த்துகளை பதிவு செய்துள்ளார் சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.