சுந்தர் சி. இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் சங்கமித்ரா: புதிய தகவல்!
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன...
சுந்தர் சி. இயக்கத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள படம் "சங்கமித்ரா'. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜெயம் ரவி மற்றும் ஆர்யா இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். 24' படத்துக்காக தேசிய விருது வென்ற திரு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ரூ. 350 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் உருவாகவுள்ளது. இப்படத்துக்கு இதர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பிரதான கதாநாயகியாக ஷ்ருதிஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவர் திடீரென விலகியதை அடுத்து டிஷா பதானி கதாநாயகியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த வருட கேன்ஸ் படவிழாவில் இப்படத்தின் தொடக்கவிழா நடைபெற்றது. முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தடைகள் விலகி விரைவில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.