முகப்பு
செய்திகள்

இணையத்தில் கசிந்த ரஜினியின் அடுத்த பட கெட்டப்: அதிர்ச்சியில் முருகதாஸ் 

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் ரஜினியின் கெட்டப் புகைப்படங்கள்  இணையத்தில் கசிந்துள்ளதால்,  முருகதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். 

Updated On : 7 ஏப்ரல் 2019, 1:00 pm IST
பகிர்:

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் ரஜினியின் கெட்டப் புகைப்படங்கள்  இணையத்தில் கசிந்துள்ளதால்,  முருகதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். 

சர்கார் படத்தையடுத்து ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கவுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார்.  

லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 முதல் மும்பையில் தொடங்கும் என்று அறியப்படுகிறது. 2020 பொங்கல் சமயத்தில் படம் வெளியாகும் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

Advertisement

இந்நிலையில் இந்தப் படத்தில் ரஜினியின் கெட்டப் தொடர்பான புகைப்படங்கள்  இணையத்தில் கசிந்துள்ளதால்,  முருகதாஸ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.  

இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு அவர்கள் கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் சனிக்கிழமையன்று ரகசியமாக போட்டோ ஷூட் நடத்தப்பட்டது.

இதில் ரஜினிகாந்துக்கு கமிஷனர் போல போலீஸ் உடை அணிவித்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பாதுகாப்பாக போட்டோ ஷூட் நடத்தப்பட்டாலும் அங்கிருந்த யாரோ ரஜினியின் போலீஸ் அதிகாரி தோற்றத்தை செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் கசிய விட்டுள்ளார்.

(IMAGE COURTESY: TWITTER)

தற்போது இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. படப்பிடிப்புக்கு முன்னரே ரஜினியின் தோற்றப் புகைப்படம் வெளியாகியுள்ளதால், இயக்குநர் முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.