FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

நல்லவனா இருக்கலாம் ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது! 44 ஆண்டு கால ரஜினியிஸம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சூப்பர் ஸ்டைல் பன்ச் டயலாக்!

Updated On : 12 டிசம்பர் 2019, 1:54 pm IST
பகிர்:

இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் 70- வது பிறந்தநாள்.  டிசம்பர் மாதம் 12-ம் தேதி வந்துவிட்டால் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.  குறிப்பாக நெட்டிசன்கள் ரஜினியின் படங்களை வைரலாக்குவதும், திரைப்பட வசனங்களை மீம்ஸ் போடுவதும், அவரது சூப்பர் ஹிட் பாடல்களை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைப்பதும், பிடித்த வசனங்களை ஷேர் செய்வதுமாக சமூக வலைத்தளங்களை அதகளப்படுத்திவிடுவார்கள்.  வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், பின்ட்ரஸ்ட், என சர்வம் ரஜினிமயமாக இருக்கும்.

சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும். உங்க பேரை ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும் என்ற பாடல்தான் ஒவ்வொரு ரஜினி ரசிகருக்கும் தேசிய கீதம். இதைத் தொடர்ந்து படங்களில் அவர் பேசிய வசங்களை அவ்வப்போது சொல்லி மகிழ்வது ரஜினியிஸத்துக்கு அழகு. அவ்வகையில் காலத்தால் அழிக்க முடியாத சில பன்ச் வசனங்கள் இவை : (இது ஒரு சாம்பிள் தான், தலைவர் உதிருக்கும் ஒவ்வொரு சொல்லும் மந்திரம் என்று கூறும் வெறித்தன ரசிகர்கள் உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது).

படத்தில் தன் பெயரைச் சொல்லும் ஸ்டைச் பன்ச் இவை :

Advertisement

Advertisement

மல அண்ணாமலை (அண்ணாமலை)

பாட்ஷா - மாணிக் பாட்ஷா

அரசியல் பன்ச்சுகளுக்கு அளவில்லை, என்றாலும் மிகவும் பவுர்ஃபுல் பன்ச் இது 

"நா எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்" (முத்து)

"கண்ணா பன்னிதான் கூட்டமா வரும் சிங்கம் சிங்கிளாத்தான் வரும்" (சிவாஜி)

"பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல...!" (சிவாஜி)

ரசிகர்களை குஷிப்படுத்தும் சில பன்ச் டயலாக்

"இது எப்படி இருக்கு....?" (16 வயதினிலே)

"சீவிடுவேன் சீவி...!" (முரட்டு காளை)

"நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" - (பாட்ஷா)

"கஷ்டபடாம எதுவும் கிடைக்காது; கஷ்டபடாம கிடைச்சது என்னிக்குமே நிலைக்காது" (அண்ணாமலை)

"என் வழி... தனி... வழி" (படையப்பா)

"நல்லவனா இருக்கலாம் ஆனா ரொம்ப நல்லவனா இருக்க கூடாது...!" (பேட்ட)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments