முகப்பு
செய்திகள்

நான் நடிகர் சங்கத்தை பாதுகாக்க வந்த சவுக்கிதார்: இயக்குநர் பாக்யராஜ் அறைகூவல் 

நான் நடிகர் சங்கத்தைப் பாதுகாக்க வந்த சவுக்கிதார் என்று நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Updated On : 9 ஜூன் 2019, 5:58 pm IST
பகிர்:

சென்னை: நான் நடிகர் சங்கத்தைப் பாதுகாக்க வந்த சவுக்கிதார் என்று நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் சனிக்கிழமையன்று தொடங்கியுள்ளது. 

நடிகர் சங்கத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியை எதிர்த்து நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் தலைமையிலான அணி களமிறங்குகிறது. தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்து ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர் பதவிக்கு குட்டி பத்மினி, நடிகர் உதயா போட்டியிடுகின்றனர். நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் நான் நடிகர் சங்கத்தைப் பாதுகாக்க வந்த சவுக்கிதார் என்று நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இயக்குநர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் இயக்குநர் பாக்யராஜ் ஞாயிறன்று தனது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார். அதனபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

கடந்த ஒன்றரை ஆண்டாக நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணிகள் பாதிப்பு என்பதால்தான் சுவாமி சங்கரதாஸ் அணி உருவாகியுள்ளது.

விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

சவுகிதார் எனக் கூறி மோடி தேர்தலை சந்தித்தது போல நாங்களும் நடிகர் சங்கத்தை பாதுகாக்கவே இங்கு வந்துள்ளோம்.

நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.