துருவ் விக்ரமின் 'ஆதித்ய வர்மா' டீசர் வெளியீடு
நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை: நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
அர்ஜூன் ரெட்டி என்கிற தெலுங்குப் படம் 2017-ல் வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தது. விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே நடிப்பில் சந்தீப் வங்கா இயக்கிய படத்துக்கு நல்ல விமரிசனங்கள் கிடைத்தது மட்டுமல்லாமல் வசூலிலும் அசத்தியது.
இந்தப் படம் தமிழில் வர்மா என்கிற பெயரில் ரீமேக் ஆனது. பிரபல இயக்குநர் பாலா இயக்கினார். விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக இப்படத்தின் மூலமாக அறிமுகமானார். வங்காள நடிகையான மேகா செளத்ரி, துருவ் ஜோடியாக நடித்தார். ஈஸ்வரி ராவ், பிக் பாஸ் ரைஸா போன்றோரும் இப்படத்தில் நடித்தார்கள். இயக்குநர் ராஜூ முருகன் வசனம் எழுதினார். அர்ஜூன் ரெட்டி படத்துக்கு இசையமைத்த ரதன், வர்மா படத்துக்கும் இசையமைத்தார்.
Advertisement
Advertisement
இந்த வருடம் பிப்ரவரி 14 அன்று வெளிவருவதாக இருந்த வர்மா படம் திடீரென கைவிடப்பட்டது. படத்தின் இறுதி வடிவம் குறித்து பாலா - தயாரிப்பாளர் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இந்த நிலை உருவானது. இயக்குநர் உள்ளிட்ட புதிய படக்குழுவினரும் கதாநாயகியும் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வர்மா என்கிற தலைப்பு தற்போது, ஆதித்ய வர்மா என மாற்றப்பட்டுள்ளது. சந்தீப் வங்காவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கிரீசாயா இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். அர்ஜூன் ரெட்டி புதிய தமிழ் ரீமேக்குக்கு, கடந்த வருடம் வெளியான ஹிந்திப் படமான அக்டோபர் படத்தில் அறிமுகமாகிக் கவனம் பெற்ற பனிதா சந்து கதாநாயகியாகத் தேர்வானார். ஏழாம் அறிவு படத்துக்குப் பிறகு ரவி கே. சந்திரன் தமிழில் மீண்டும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றவுள்ளார். மேலும் வர்மா படத்தில் நடித்த ரைஸா வில்சனுக்குப் பதிலாக ப்ரியா ஆனந்த் நடிக்கவுள்ளார். மேலும் வர்மா படத்துக்கு இசையமைத்த ரதன் இப்படத்துக்கும் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில் நடிகர் விக்ரமின் மகன் துருவ் கதநாயகனாக அறிமுகமாகும் ஆதித்ய வர்மா திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.