இவருக்குத் தான் குரல் கொடுக்கிறார் நடிகர் அரவிந்த்சாமி!
உலகம் முழுக்க வசூலில் சாதனை நிகழ்த்திய, அயர்ன் மேன், தி ஜங்கிள் புக் ஆகிய படங்களை இயக்கிய ஜோன் ஃபவ்ரே, தி லயன் கிங் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஜூலை 19-ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. 1994-ல் அனிமேஷன் படமாக வெளிவந்த படத்தின் ரீமேக்தான் இது.
'தி லயன் கிங்' தமிழ் பதிப்பில் 'ஸ்கார்’ கதாபாத்திரத்திற்கு நடிகர் அரவிந்த்சாமி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், 'ஸ்கார் கதாபாத்திரத்திற்குத்தான் நான் டப்பிங் செய்ய விரும்பினேன். காரணம் அந்த கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமான பல பரிமாணங்களைக் கொண்டது. சில வருடங்களுக்கு முன்பு இதே 'லயன் கிங்' அனிமேஷன் படத்தில் சிம்பாவுக்கு டப்பிங் பேசினேன். அப்போது அனிமேஷன் படத்திற்கு டப்பிங் செய்வது சிறந்த அனுபவமாக இருந்தது’ என்றார் அரவிந்தசாமி
'தி லயன் கிங்' படத்தின் தமிழ் பதிப்பில் 'சிம்பா' கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். அதே போல், இந்தியில் முபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர் ஷாருக்கானும், மகன் சிம்பா கதாபாத்திற்கு அவரது மகன் ஆரியனும் குரல் கொடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.