FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

எலான் மஸ்க்கிற்கு முன்பே... வைரலாகும் ரன்பீர் கபூர் கருத்து!

ரன்பீர் கபூர் பேசியது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..

நடிகர் ரன்பீர் கபூர், எலான் மஸ்க்.
பகிர்:

எலான் மஸ்க் குறித்து நடிகர் ரன்பீர் கபூர் பேசியது வைரலாகி வருகிறது.

இயக்குநர் நிதிஷ் திவாரி இயக்கத்தில் நடிகர்கள் ரன்பிர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படமாக உருவாகியுள்ள ராமாயணா வருகிற நவ. 5 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.

இப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இதன் டிக்கெட் முன்பதிவுகள் இந்திய அளவில் ஆரம்பமாகியது. ஆனால், ஹிந்தியிலேயே எதிர்பார்த்த வேகத்தில் முன்பதிவுகள் நடைபெறாமல் மந்தமாகவே இருப்பதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகர் ரன்பீர் கபூர், “எலான் மஸ்க் பறக்கும் கார்களைக் கண்டுபிடிப்பதற்கு 5000 ஆண்டுகள் முன்பே இந்தியா அதனைச் செய்துவிட்டது” என ராமாயணத்தில் ராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார்.

ரன்பீரின் இக்கருத்தைச் சிலர் கிண்டலடிப்பதுடன் அந்த விடியோவை அதிகம் பகிர்ந்து வருவதால் விவாதமே எழுந்துள்ளது.

Actor Ranbir Kapoor's remarks about Elon Musk are going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments