முகப்பு
செய்திகள்

நான் நடித்துள்ளது பிடிக்கவில்லை என்றால் மன்னிக்கவும்: சூப்பர் டீலக்ஸ் நடிகை கருத்து 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள பகுதி பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் என்று  நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

Updated On : 31 மார்ச் 2019, 2:30 pm IST
பகிர்:

சென்னை: சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள பகுதி பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் என்று  நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

'ஆரண்ய கான்டம்' படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியாகியுள்ள படம் 'சூப்பர் டீலக்ஸ்'.

விமர்சன ரீதியாக பலராலும் பாராட்டப்பட்டு வரும் இந்த படம் குறித்து விமர்சனங்களும் வெளிவருகின்றன.

Advertisement

Advertisement

இப்படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் அறிமுக நாயகி மிருணாளினி நடித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் 'டப்ஸ்மாஷ்' எனப்படும் செயலி மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக இருக்கிறார்.தற்போது நாயகியாக இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நான் நடித்துள்ள பகுதி பிடிக்கவில்லை என்றால் மன்னித்து விடுங்கள் என்று மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

சூப்பர் டீலக்ல் படத்தில் எனது சிறிய பங்களிப்புக்காக நிறைய பாராட்டுகளைப் பெற்று வருகிறேன். நன்றி மக்களே. இன்று நான் திரையில் இருப்பதற்கு நீங்கள்தான் காரணம். உங்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். படத்தில் நான் வந்த பகுதி பிடிக்காதவர்களுக்கு, மன்னிக்கவும். அடுத்த முறை இன்னும் சிறப்பாக என் பணியைச் செய்ய முயற்சி செய்கிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.