முகப்பு
செய்திகள்

படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார்: சிம்பு மீது புதிய புகார்!

மஃப்டி படத்துக்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்புக்கு வர சிம்பு மறுப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். 

Updated On : 9 அக்டோபர் 2019, 1:04 pm IST
பகிர்:

மஃப்டி படத்துக்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் படப்பிடிப்புக்கு வர சிம்பு மறுப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார். 

ஞானவேல் ராஜா தயாரிப்பில் கன்னடப் படமான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்பு நடிக்கவிருந்தார். கன்னடத்தில் அப்படத்தை இயக்கிய நார்தன் தமிழிலும் இயக்குநராக நியமிக்கப்பட்டார். சிம்புவுடன் இணைந்து கெளதம் கார்த்திக்கும் இப்படத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பில் சில நாள்கள் கலந்துகொண்டுள்ளார் சிம்பு. ஆனால் அவரால் தொடர்ந்து படப்பிடிப்பில் சரியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. இதனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்ட்டுள்ளது. 

இதையடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஞானவேல் ராஜா அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: மஃப்டி படத்தில் சிம்பு நடிப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் படப்பிடிப்புக்கு வர மறுக்கிறார். இதனால் அதிகச் செலவு ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மாநாடு என்கிற படம் உருவாகவுள்ளதாகக் கடந்த வருடம் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு, 2019 கோடைக்காலத்தில் படம் வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு இந்த வருடம் ஜூன் 25 முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மாநாடு படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டதாக அறிவித்தார் படத்தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர, படம் தொடங்க இயலவில்லை. அதனால் சிம்பு ’நடிக்க இருந்த’ மாநாடு படத்தைக் கைவிடுவதைத் தவிர்க்க இயலவில்லை. சிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். வெங்கட் பிரபு இயக்க, மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும் என்று அவர் அறிக்கை வெளியிட்டார். இதன் பிறகு, சிம்புவின் புதிய படம் குறித்து டி.ராஜேந்தர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சிம்பு அடுத்ததாக மகா மாநாடு என்கிற படத்தை இயக்கி நடிக்க உள்ளதாகவும் அந்தப் படத்தின் பட்ஜெட் ரூ. 125 கோடி என்றும் அறிவித்தார். 5 மொழிகளில் உருவாகவுள்ள இந்தப் படத்தை சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கவுள்ளது என்றும் கூறினார். இந்நிலையில் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments