FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஷகீலா திரைப்படம்: கிறிஸ்துமஸ் வெளியீடு!

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, ஷகீலா என்கிற ஹிந்தித் திரைப்படமாக உருவாகியுள்ளது.

Updated On : 8 டிசம்பர் 2020, 11:58 am IST
பகிர்:

நடிகை ஷகீலாவின் வாழ்க்கை, ஷகீலா என்கிற ஹிந்தித் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஷகீலா கதாபாத்திரத்தில் நடிகை ரிச்சா சதா நடித்துள்ளார். 

கன்னட இயக்குநரான இந்திரஜித் லங்கேஷ், இப்படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமாகியுள்ளார். ஷகீலா படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது.

கோடை விடுமுறையின்போது ஷகீலா படம் வெளிவருவதாக இருந்தது. ஆனால், கரோனா காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. 

Advertisement

Advertisement

படத்தை எடுத்து முடித்துவிட்டேன். தணிக்கை செய்யப்பட்டு வெளியீட்டுத் தயாராக உள்ளது. இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவது பொருத்தமாக இருந்தாலும் அனைத்து விதமான ரசிகர்களையும் ஈர்த்தவர் நடிகை ஷகீலா. அனைவரும் இந்தப் படத்தை ஆவலாக உள்ளார்கள். எனவே தான் படத்தைத் திரையரங்கில் வெளியிடத் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள் என்று பட இயக்குநர் இந்திரஜித், சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார்.

இந்நிலையில் ஷகீலா படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும், இப்படத்தில் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பங்கஜ் திரிபாதியின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments