ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் கோடியில் ஒருவன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி பெப்சி சிவா தயாரிப்பில் தமிழரசன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா தயாரிப்பில் அக்னி சிறகுகள் என்ற படத்திலும் இயக்குநர் செந்தில் குமாரின் ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் நிறுவனம் சார்பில் எடுக்கப்படும் காக்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகவுள்ள பிச்சைக்காரன் 2 படம் அதிகாரபூர்வமாகக் கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.
கோடியில் ஒருவன் படத்தை டிடி. .ராஜா, டி.ஆர். சஞ்சய் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். மெட்ரோ, ஆள் படங்களை ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கோடியில் ஒருவன் படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.