FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

’எனக்கு கல்யாணம் நடக்கணும்': சிம்பு வெளியிட்ட விடியோ

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு வெளியிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Updated On : 14 பிப்ரவரி 2021, 8:38 pm IST
பகிர்:

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்பு வெளியிட்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைமுன்னிட்டு நடிகர் சிம்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியா ஒன்றை வெளியிட்டுள்ளார். விடியோவில், சக நடிகரும், சிம்புவின் நெருங்கிய நண்பருமான மகத்தின் செல்ல நாயிடம் சிம்பு பேசுகிறார். 
அதில் அவர் பேசியதாவது, நீ பொண்ணு. இப்பதான் நீ வளர்ந்து வந்திருக்க. இப்ப நீ ஒரு பையனை சந்திக்கனும். அந்த பையனோட உனக்கு சில விஷயங்கள் எல்லாம் நடக்கணும். அதுக்கு முதலில் எனக்கு கல்யாணம் நடக்கணும். நான் மட்டும் தனியா இருக்கேன். 
நீ மட்டும் ஜாலியா இருக்கனா அது நியாயம் இல்ல. புரிஞ்சதா பப்பு. என் கஷ்டம் உனக்கு புரியுதா இல்லையா? ஏதாவது பேசு. பரவாயில்லை பரவாயில்லை. எனக்கு அந்த கடவுள் கொடுப்பாரு. வரும்போது வரட்டும். நீ சந்தோஷமா இரு. ஏதாவது சொல்லேன். 
ஆயிடும்னு சொல்லுறீயா. ஆயிடுமா இவ்வாறு அவர் பேசியுள்ளார். சிம்பு கலகலப்பாக பேசும் அந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments