இயக்குநர் விஜய்யின் புதிய படம்: ஓடிடியில் வெளியாகிறது
தலைவி படத்துக்கு அடுத்ததாக ஓடிடியில் நேரடியாக வெளியிடுவதற்காக...
தலைவி படத்துக்கு அடுத்ததாக ஓடிடியில் நேரடியாக வெளியிடுவதற்காகப் படம் ஒன்றை இயக்கியுள்ளார் விஜய்.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் இயக்கியுள்ள இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தலைவி படத்துக்கு அடுத்ததாக ஓடிடிக்காக படம் ஒன்றை இயக்கியுள்ளார் விஜய்.
Advertisement
Advertisement
நிவேதா பெத்துராஜ், மஞ்சிமா மோகன், மேகா ஆகாஷ், ரெபா மோனிகா ஜான் நடித்துள்ள இப்படத்துக்கு அக்டோபர் 31 லேடீஸ் நைட் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ளது. படப்பிடிப்பை முடித்துவிட்ட இயக்குநர் விஜய், ஓடிடியில் படத்தை வெளியிடுவதற்கான பணிகள் ஈடுபட்டு வருகிறார். இப்படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.