FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம்! தலைவராக முதல்வர் இருப்பார்: அமைச்சர் ராஜ்மோகன்

தலைமைச் செயலகத்தில் அமைக்கப்படும் தமிழ்ச் சங்கத்துக்கு முதல்வரே தலைவராக இருப்பார் என அமைச்சர் கூறியது குறித்து...

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்பட்டு, தலைவராக முதல்வரே இருப்பார் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாள் என முதல்வா் விஜய் தலைமையிலான தவெக அரசு அறிவித்த நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் ராஜ்மோகன் உள்பட அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என். ஆனந்த், வன்னி அரசு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

தொடர்ந்து, நிகழ்ச்சியில் ராஜ்மோகன் பேசியதாவது, "தமிழ்ப் பண்பாட்டை வலிறுத்தும் வகையில் அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும் அமைச்சர்களும் வாரத்துக்கு ஒருநாள் பாரம்பரிய உடையான வேட்டி - சட்டை அணிந்து வர முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். நெசவாளர்களின் வாழ்வாதாரத்துக்கு இது உறுதுணையாக என்று என்னுடைய கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டார். இதன் மூலம், அரசு அலுவலகங்களில் வாரத்துக்கு ஒருநாள் மரபு ஆடை நாள் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்.

மேலும், முதல்வர் விஜய்யின் ஆணைக்கிணங்க தலைமைச் செயலகத்தில் தமிழ்ச் சங்கம் அமைக்கப்படும். ஏற்கெனவே இருக்கும் சங்கங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு, அதன் தலைவராக முதல்வரே இருப்பார். அதுமட்டுமின்றி, மீண்டும் தமிழ் மண்ணில் தொடங்கி உலகம் முழுவதும் உலகத் தமிழ் மாநாடு நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

summary

The Chief Minister will serve as the president of the Tamil Sangam to be established at the TN Secretariat, says Minister Rajmohan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments