பிசாசு - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'பிசாசு' திரைப்படம் பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கான பேச்சவார்த்தை நடைபெற்று வந்தது.
பின் முழுக்கதையும் தயாரான பின்பு நடிகை ஆண்ட்ரியாவை நாயகியாக வைத்து பிசாசு - 2 திரைப்படத்தை இயக்கி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
இதையும் படிக்க | மீண்டும் கதை திருட்டு சர்ச்சையில் இயக்குநர் ஷங்கர்: கார்த்திக் சுப்புராஜின் உதவியாளர் புகார்
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு தனது பிறந்த நாளன்று பிசாசு-2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட மிஷ்கின் 2020 டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்கினார். நாயகியாக நடிகை ஆண்ட்ரியா நடிக்க கார்த்திக் ராஜா இந்தத் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் . பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தில் அண்ட்ரியாவுடன் பூர்ணா , ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மேலும் விஜய் சேதுபதி கவுரவ தோற்றதில் ஒரு காட்சியில் வருகிறார்.
முன்னதாக பிசாசு-2 திரைப்படத்தின் முதல்பார்வை கடந்த ஆக-3 ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.