சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்துக்கு கதாநாயகி யார் தெரியுமா?
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்கு கதாநாயகியாக அனுகீர்த்தி வாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்து வரும் படத்துக்கு கதாநாயகியாக அனுகீர்த்தி வாஸ் ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீம ராஜா படங்களை இயக்கியவர் பொன் ராம். இவர் தற்போது சசிக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக மிர்னாலினி நடிக்க, சத்யராஜ், சமுத்திரக்கனி, நந்திதா, சரண்யா பொன்வண்ணன், சிங்கம் புலி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அந்தோனி தாசன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | நீட் காரணமாக எனது வீட்டிலேயே தற்கொலை நிகழ்ந்திருக்கிறது: நடிகை சாய் பல்லவி உருக்கம்
இந்தப் படத்தையடுத்து பொன் ராம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி கதாநயாகனாக நடிக்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் கதாநாயகியாக அனுக்ரீத்தி வாஸ் நடிக்கவிருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.