இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த ரஜினிகாந்த்
இயக்குநரின் சிவாவின் வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் அவருக்கு தங்க செயின் பரிசளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சிவா இந்தப் படத்தை இயக்கியிருந்தார்.
சில ரஜினிகாந்த் ரசிகர்களுக்குமே திருப்தியை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக இந்தப் படம் வெற்றி படமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் சிவாவின் வீட்டிற்கு சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நடிகர் ரஜினிகாந்த், அவருக்கு தங்க செயின் பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சமந்தாவின் நடனத்தால் சூடாகவிருக்கும் குளிர் காலம்': அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' பாடல் பற்றிய தகவல்
அண்ணன் தங்கை உறவை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும் நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி, சதிஷ், வேல ராமமூர்த்தி, ஜெகபதி பாபு என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். டி.இமான் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.