புதிய படத்துக்காக மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - இளையராஜா ?
அடுத்தப் படத்துக்காக ரஜினிகாந்த் - இளையராஜா இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாத்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரது அடுத்தப் படத்தை இயக்கும் இயக்குநர்கள் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஹிந்திப் பட இயக்குநர் பால்கி, நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து ஒரு கதை சொல்லியிருக்கிறாராம். அந்தக் கதை அவருக்கு பிடித்துவிட்டதாகவும், விரைவில் இந்தப் படம் குறித்து ரஜினிகாந்த் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க | 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்துக்காக லண்டனில் வடிவேலு
Advertisement
Advertisement
இந்தக் கூட்டணி உறுதியானால் படத்துக்கு பெரும்பாலும் இளையராஜா தான் இசையமைக்க வாய்ப்பிருக்கிறது. காரணம் பால்கி இயக்கிய பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.