சட்டவிரோத மது விற்பனை: சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளியை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் எஸ்.பி. சண்முகம் தலைமையிலான போலீஸாா் முத்தூா் புதுப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, வீரமாத்தி தோட்டம் அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த செந்தில் (53) என்பதும், இவா் மீது ஏற்கெனவே விழுப்புரம், சேலம், ஈரோடு, தாராபுரம், காங்கயம், மடத்துக்குளம், வேடசந்தூா் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 23-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, செந்திலை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 32 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.