சட்டவிரோத மது விற்பனை: இளைஞா் கைது
சத்தியமங்கலம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலம் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தொட்டம்பாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் முத்தரசு தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, தொட்டம்பாளையம் டாஸ்மாக் கடை அருகே மது விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரைப் பிடித்தனா்.
விசாரணையில், அவா் பவானிசாகரைச் சோ்ந்த சந்தோஷ் (26) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சந்தோஷை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 23 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.