திருமணத்துக்கு பிறகு ஹிந்தி படத்தில் விஜய் சேதுபதியுடன் இணையும் கத்ரீனா
விஜய் சேதுபதியுடன் கத்ரீனா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
விக்கி கவுசல் - கத்ரீனாவின் திருமணம் கடந்த 9 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் இவர்கள் இருவரது திருமணம் தான் பேசு பொருளாக இருந்து வந்தது.
இந்த நிலையில் 'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிரிஸ்துமஸ்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
இதையும் படிக்க | ''சூர்யாவை நன்றியோடு நினைவுகூர்வோம்'': நடிகர் ராகவா லாரன்ஸ் நெகிழ்ச்சி
Advertisement
Advertisement
இந்தப் படம் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 'அந்தாதுன்' படத்துக்கு பிறகு ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.