FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சூர்யாவும்.. பிரியங்கா மோகனும்..: எதற்கும் துணிந்தவன் இரண்டாவது பாடல் வெளியீடு

எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 27 டிசம்பர் 2021, 8:41 pm IST
பகிர்:


எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். பாண்டிராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். நம்ம வீட்டுப் பிள்ளை வெற்றிக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
 
இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

டி. இமான் இசையமைக்க, ரத்னவேலு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் வருகிற பிப்ரவரி 4-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. 

படத்திலிருந்து அனிருத்-ஜி.வி. பிரகாஷ் பாடிய 'வாடா தம்பி' பாடல் ஏற்கெனவே வெளியானது. இதை விக்னேஷ் சிவன் எழுதியிருக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடல் இன்று (திங்கள்கிழமை) வெளியானது. உள்ளம் உருகுதைய்யா எனும் இந்தப் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். பிரதீப், வந்தனா மற்றும் பிருந்தா ஆகியோர் பாடலைப் பாடியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments