''என் கணவர் இறந்துவிட்டார், அவர் இறந்தபொழுது...'' : பிக்பாஸ் வீட்டில் பவானி ரெட்டி உருக்கம்
பிக்பாஸ் சீசன் 5 புதிய ப்ரமோவில் பவானி ரெட்டி தனது திருமண வாழ்க்கை குறித்து இசைவாணியிடம் பகிர்ந்துகொள்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5 புதிய ப்ரமோவில் பவானி ரெட்டி தனது திருமண வாழ்க்கை குறித்து இசைவாணியிடம் பகிர்ந்துகொள்கிறார்.
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று வெளியான இரண்டு ப்ரமோக்களிலும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றி மற்ற போட்டியாளர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அந்த வகையில் இசைவாணி தன்னுடைய வாழ்வில் தான் அனுபவித்த துன்பங்களை மற்ற போட்டியாளர்களின் முன்னிலையில் பகிர்ந்து கொண்டார். அதனைக் கேட்ட அனைவரும் கண் கலங்கினர். இந்த நிலையில் மூன்றாவது ப்ரமோ வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | நயன்தாரா படத்தில் கதாநாயகனாகும் பிக்பாஸ் கவின்: வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகம்
ப்ரமோவில் இசைவாணியும், பவானி ரெட்டியும் பேசிக்கொள்கின்றனர். அப்போது இசைவாணி, பவானி ரெட்டியிடம் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா எனக் கேட்க, அதற்கு ஆகிவிட்டது. ஆனால் என் கணவர் இறந்துவிட்டார். அவர் இறந்தபொழுது எனக்கு அழுகை வரவில்லை. நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்த சம்பவத்தை நினைத்து நான் மிகவும் வருத்தமடைந்து இருந்தேன் என்று உருக்கமாக பேசுகிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.