கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியீடு
நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் விக்ரம் நடித்துள்ள கோப்ரா படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
கோப்ரா படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அப்படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது படக்குழுவினரை அதிர்ச்சியடைச் செய்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க | சார்லி சாப்ளினின் 133-வது பிறந்தநாள்: மெளன நாயகன்
இந்நிலையில் நடிகர் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு கோப்ரா திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கெனவே தும்பி துள்ளல் எனும் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மகான் திரைப்படத்திற்கு பிறகு வெளியாகும் நடிகர் விக்ரமின் திரைப்படம் என்பதால் இப்படத்தை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.