நடிகர் மாதவன் மகனுக்கு கீர்த்தி சுரேஷ் வாழ்த்து
டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் 2022 நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கில் நடைபெற்ற டேனிஷ் ஓபன் நீச்சல் போட்டியில் 1500 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதனைத் தொடர்ந்து இன்று 800 மீட்டர் ஃப்ரீ ஸ்டைல் பிரிவில் வேதாந்த் மாதவன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
அவரது இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாதவனின் மகனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், வெற்றி பெற்ற வேதாந்த் மாதவனுக்கு வாழ்த்துகள். உங்களுடைய சாதனை பலருக்கு தூண்டுகோளாய் அமையும். பெருமைமிகுந்த தந்தைக்கும் எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.