செய்திகள்

இந்தியன் 2-ல் உலக நாயகனுடன் இணையும் நவரச நாயகன்!

DIN

‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடிகர் கார்த்திக் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த இந்தியன் 2 படம் விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நிற்கிறது. தயாரிப்பு தரப்பு மற்றும் நடிகர்கள் பிரச்னையால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ரூ.400 கோடி வசூலைத் தாண்டியதால் தற்போது  ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் பணிகளை மீண்டும் துவங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அதில் ஒரு பகுதியாக, முதலில் காட்சிப்படுத்தப்பட்ட படப்பிடிப்பில் பங்குபெற்ற  நடிகர் விவேக் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். காஜல் அகர்வாலுக்கு திருமணம் முடிந்து குழந்தையும் பிறந்துவிட்டது. 

அதனால், படத்தின் நாயகியாக பிரபல ஹிந்தி நடிகை தீபிகா படுகோனிடன் இயக்குநர் ஷங்கர் தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியானது ஆனால் அதனை மறுக்கும் விதமாக, காஜல் மீண்டும் நடிக்க ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் கார்த்திக் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஷங்கர் தற்போது ராம் சரண் நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்கிவருகிறார். இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. முதன்முறையாக ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தை ஷங்கர் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT