செய்திகள்

திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவு: துல்கர் சல்மானின் நெகிழ்ச்சி பதிவு! 

பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். 

DIN

துல்கர் சல்மானின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது சீதா ராமம் திரைப்படம். இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். 5 மொழிகளில் வெளியாகி பெறும் ஆதரவினைப் பெற்றது. 

தற்போது சீதா ராமம் வெற்றியை தொடர்ந்து கிங் ஆஃப் கோதா என்ற புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த படத்தினை அபிலாஷ் ஜோஷி இயக்குகிறார். ஜீ ஸ்டூடியோஸ் இந்த படத்தினை தயாரிக்கிறது. இந்தப் படமும் மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என 5 மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு துலகர் சல்மான் அவரது மனைவி அமல் சூபியா உடன் திருமணம் நடந்து 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடினர். இதனையொட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதற்கு காஜல், மிர்னால் தாகூர், கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். 

துலகர் சல்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது: 

சிறிது தமாதாமான பதிவு! ஆனால் உனக்கு தெரியும் இது மகிழ்ச்சியான  நாளென. 11 ஆண்டுகள் திருமண வாழ்த்துகள் அமல். எனக்கு தெரியவில்லை காலம் எங்கே சென்றதென. எனது தாடி எப்போது நிறம் மாறியதெனவும் தெரியவில்லை. நாம் எப்போது புதிய வீட்டினை வாங்கினோம் எனவும் தெரியவில்லை. நான் இந்த சாதனைகளை எல்லாம் திரும்பி பார்க்கும்போது இது வேறொருவர் வாழ்க்கை மாதிரி இருக்கிறது. ஆனால் நாம் இப்போது நம்முடைய சொந்த கதையை எழுதிக்கொண்டு இங்கிருக்கிறோம். 

பெற்றோர்களாக இருப்பதாலும் இன்னும் சில காரணங்களாலும் இந்த பதிவு காலதாமதாமானது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.4% ஆக உயர்த்தி கணிப்பு: ஆர்பிஐ

கோலாகலமாக தொடங்கிய டி20 உலகக் கோப்பை.. தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சு!

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த யானைக்குட்டி! மீட்கும்வரைக் காத்திருந்த தாய் யானை!

தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு: இன்றைய நிலவரம்!

மசூதி குண்டுவெடிப்பு.. பழிபோடும் பாகிஸ்தான்: நிராகரிக்கும் இந்தியா!

SCROLL FOR NEXT