முகப்பு
செய்திகள்

மறுமணம் செய்துகொண்டார் இசையமைப்பாளர் இமான்

இந்தத் திருமணத்தில் இமானின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள்.

Updated On : 16 மே, 2022 at 12:13 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:16 PM


பிரபல இசையமைப்பாளர் இமான் மறுமணம் செய்துகொண்டுள்ளார்.

2008-ல் மோனிகா ரிச்சர்டை முதலில் திருமணம் செய்தார் இமான். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உண்டு. மோனிகாவை விவாகரத்து செய்துவிட்டதாகக் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். 

இந்நிலையில் மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் அமீலியாவை இமான் மறுமணம் செய்துகொண்டுள்ளார். நடிகை குட்டி பத்மினி, திருமணப் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தத் திருமணத்தில் இமானின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டார்கள். திரையுலகில் சமீபத்தில் 20 ஆண்டுகள் நிறைவு செய்த இமானின் மறுமணத்துக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.