செய்திகள்

நடிகை அஞ்சலியின் ‘ஜான்சி’ டிரைலர் வெளியானது!

DIN

நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜான்சி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

நடிகை அஞ்சலி தமிழில் 2007ஆம் ஆண்டு ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமானார். ஆனால் 2006ஆம் ஆண்டிலே அவர் தெலுங்கில் முதல் படம் நடித்திருந்தார். கடைசியாக தமிழில் பாவக் கதைகள் தொடரில் நடித்திருந்தார். தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்து வருகிறார். 

இயக்குநர் திரு இயக்கத்தில் அஞ்சலி நடிக்கும் இணையத்தொடர் ‘ஜான்சி’. இயக்குநரின் திருவின் இரண்டாவது படைப்பு இது. அவர் முதன்முதலாக இயக்கும் இணையத்தொடரும் இதுவே. இதில் காவல்துறை அதிகாரியாக அஞ்சலி நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசரண் பாகலா இசையமைக்க ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த தொடர் தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது. இந்த இணையத் தொடர் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்.27 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

அரசுப் பேருந்துகளில் சோதனை நிறைவு

SCROLL FOR NEXT