முகப்பு
செய்திகள்

பார்வதியின் படத்தை இயக்கும் லீனா மணிமேகலை!

இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Updated On : 18 அக்டோபர், 2022 at 7:26 PM
நடிகை பார்வதி, இயக்குநர் லீனா மணிமேகலை
பகிர்:

இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கத்தில் நடிகை பார்வதி கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லீனா மணிமேகலை தமிழ்க் கவிஞர், ஆவண நிகழ்படக் கலைஞர், சமூகச் செயற்பாட்டாளர். பெண்கள் உரிமைகள், பாலியல், சமூக ஒடுக்குமுறைகள், ஈழப் போராட்டம் குறித்து இவரது கவிதைகளின் கருப்பொருள்களாக அமைகின்றன. அதிகமாக ஆவணப்படங்களையும் சில திரைப்படங்களையும் எடுத்துள்ளார். சமீபத்தில் ‘மாடத்தி’ எனும் படத்தினையும் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

சமீபத்தில், கையில் சிகரெட்டுடன் இருக்கும் ‘காளி’ போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது இந்து மத உணர்வாளர்கள் புகாரளித்தது சர்ச்சைக்குள்ளானது.

Advertisement

நடிகை பார்வதி கடைசியாக மம்மூட்டியுடன் இணைந்து நடித்த புழு திரைப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது.

சைபர் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இந்தப் படத்திற்கு ‘தன்யா’ என பெயரிடப்பட்டுள்ளது. கிராமிய விருது பெற்ற தயாரிப்பாளர் அபூர்வா பக்‌ஷி இந்தப் படத்தை தயாரித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.