திருமணம் செய்துகொள்ளும்படி எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைகளை வற்புறுத்தாதீர்கள் என நடிகர் சிம்பு கோரிக்கை வைத்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா என இரண்டு வெற்றிகளுக்கு பிறகு 3வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்திருக்கும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் சிம்பு ஹெலிகாப்டரில் வந்து அசத்தினார். தரை வழியாக வருவதாகவே இருந்தேன். தயாரிப்பு நிறுவனம்தான் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். இவ்விழாவில் நடிகர் சிம்பு பேசியதாவது:
வாழ்க்கையில் திடீரென யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. இரண்டு நபர்கள் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்த பிறகு அவர்களே திருமணம் செய்து கொள்வார்கள். நாம் அதை மதிக்க வேண்டும். இந்த நேரத்தில், உங்களது மகன் மகள்களை திருமணம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தாதீர்கள் என அனைத்து பெற்றோர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
சமூகத்தின் அழுத்தம் காரணமாக தவறான திருமணங்கள் நடைபெறுகிறது. முதலில் அவர்களை அவர்களது வாழ்க்கையை வாழ விடுங்கள். அவர்களுக்கு ஏற்றவர்களை அவர்களே தேர்வு செய்து கொள்ளட்டும். எல்லாவற்றுக்கும் மேல் கடவுள் இருக்கிறார். அவர் சரியான நேரத்தில் சரியான நபரை அனுப்புவார். அதுவரை அமைதியாக இருப்பது சிறந்தது.
'வேட்டையாடு விளையாடு 2': கமலுக்கு வாக்குறுதி அளித்த கௌதம் மேனன்
தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' - இயக்குநர் ஷங்கர் விமர்சனம் - என்ன சொல்லியிருக்கார் பாருங்க !
'கேஜிஎஃப்' பட பாதிப்பில், 6 தொடர் கொலைகளை செய்த இளைஞர் - அதிர்ச்சி சம்பவம்
இந்திய சினிமாவை பாலிவுட், டோலிவுட் எனப் பிரிக்காதீர்கள்: கரன் ஜோகர்
நல்ல நகைச்சுவைக்காகத் தாக்கப்பட்டேன்: கிறிஸ் ராக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.