முகப்பு
செய்திகள்

’குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ முதல்பார்வை வெளியீடு

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான ‘தக்ஸ்’ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ளது.

Updated On : 8 நவம்பர் 2022, 12:36 pm IST
பகிர்:

பிரபல நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவான ‘தக்ஸ்’ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியாகியுள்ளது.

நடன இயக்குநர் பிருந்தாவின் இரண்டாவது திரைப்படமான ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயராகிவரும் நிலையில், அப்படத்தின் முதல்பார்வையைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

கன்யாகுமரி மாவட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ‘மும்பைக்கார்’ திரைப்படத்தில் நடித்த ரிது ஹரோன் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் நடிகர்கள்  விக்ரந்த் மாஸ்ஸே மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் பாபி சிம்ஹா, முனிஷ்காந்த், தயாரிப்பாளர் நடிகருமான ஆர்.கே. சுரேஷும் நடித்துள்ளனர். 

இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.