முகப்பு

திருப்பரங்குன்றம்: மதுரை புறப்பட்ட உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள்

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள் மதுரை புறப்பட்டது குறித்து...

50 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம்: மதுரை புறப்பட்ட உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள்
திருப்பரங்குன்றம் தூண் - பிடிஐ
பகிர்:

சென்னை: திருப்பரங்குன்றம் கோயிலின் நிர்வாகத்தைக் கவனித்துக்கொள்ள, உச்ச நீதிமன்றத்தால் கூட்டு நிர்வாகிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோர், சனிக்கிழமை சென்னையிலிருந்து மதுரை புறப்பட்டனர். முன்னதாக, கோயில் அறங்காவலர் குழுவின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் இடைநீக்கம் செய்திருந்தது.

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாத விவகாரத்தில் தமிழக அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது. தலைமைச் செயலாளா் உள்ளிட்ட அதிகாரிகள் டிசம்பா் 15 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறும் ஆணையிட்டது.

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் இன்று தீபம் ஏற்றவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

திருப்பரங்குன்றம் மலை, தீபத் தூண், அங்கிருக்க கூடிய தா்கா உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சிஆா்பிஎப் கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், மாநில காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை சிஆா்பிஎப்- வசம் சுமூகமாக ஒப்படைக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.

கோயில் அறங்காவலா் குழு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவிடம் பொறுப்புகளை உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

மதுரை புறப்பட்ட உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதிகள்

இந்த நிலையில், மேகாலய உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி. பார்த்திபன் ஆகியோர், காலை விமானம் மூலம் மதுரைக்குச் சென்றனர்.

விமான நிலையத்தில், மாநில அரசின் நெறிமுறை அதிகாரிகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற அதிகாரி ஆகியோர் அவர்களை வரவேற்று வழியனுப்பி வைத்தனர்.

கோயில் அறங்காவலர் குழு, தேவஸ்தானத்தை நிர்வகிப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழுவின் செயல்பாட்டை உச்ச நீதிமன்றம் இடைநீக்கம் செய்து, தற்காலிகமாக அந்த இடத்திற்குப் பொறுப்பேற்றுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன், திருப்பரங்குன்றத்தில் உள்ள கல் தூணின் உச்சியில் பாரம்பரிய விளக்கு ஏற்றும் நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெறவுள்ளது.

The Supreme Court appointed joint-receivers, Justices S Vaidyanathan and V Parthiban, on Saturday left for Madurai from here to take charge of the administration of the Thirupparankundram temple from the Board of Trustees

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.