திருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தா்காவுக்கு அருகிலுள்ள தூண் மீது காா்த்திகை தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியிருக்கிறது.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூண் பகுதியில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மீது, நவ. 20ஆம் தேதி பிறப்பித்த தனது இடைக்காலத் தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மேலும், பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, திருப்பரங்குன்றம் மலையில் அனைத்து பக்தர்களும் தீபங்களை ஏற்றுவதற்கு அனுமதிக்குமாறு, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
Advertisement
திருப்பரங்குன்றம் மலை மீது தூண் பகுதியில் தீபம் ஏற்றப்படாதது குறித்து தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று பிறப்பித்த உத்தரவில், தர்காவிலிருந்து அனைத்து திசைகளிலும் குறைந்தது 50 மீட்டர் தொலைவில் உள்ள 'தீபத்தூன்' (Deepathoon) மற்றும் பிற இடங்களில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
தர்காவிலிருந்து அனைத்து திசைகளிலும் குறைந்தது 50 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூண் மற்றும் பிற இடங்களில் விளக்குகளை ஏற்ற வேண்டும் என்றும், தர்காவைப் பாதுகாக்கவும், அங்கு வருவோருக்கு எந்தத் தடையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் சிஆர்பிஎஃப் (CRPF) படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் இன்று பிறப்பித்திருக்கும் உத்தரவானது, எந்த தரப்பினருக்குமோ எந்த கட்சியினருக்குமோ ஆதரவாக வழங்கப்படவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
நவம்பர் 20-ஆம் தேதியிட்ட தனது உத்தரவில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும், அவற்றை அதன் எழுத்து மற்றும் உணர்வு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் முழுமையாகச் செயல்படுத்துவதை சம்பந்தப்பட்ட அனைவரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நவம்பர் 24-ஆம் தேதி உச்சிப் பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட சுடர் தற்போது அணைந்து போயிருந்தால், நாளை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளைத் தனிப்பட்ட முறையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான அறிவிப்பாணைகளை வழங்குவதற்கான கால அவகாசத்தை, மூன்று நாள்களிலிருந்து ஐந்து நாட்களாக நீதிமன்றம் நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.