முகப்பு

திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது பற்றி...

திருப்பரங்குன்றம் வழக்குகள் நாளை விசாரணை! உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!
உச்ச நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பான வழக்குகள் நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில், கார்த்திகை தீபத்தன்று ஒரு நாள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த நவம்பர் 20 அன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவை வெளியிட்டது.

ஆனால், கார்த்திகை தீப நாளான நவம்பர் 24 அன்று, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபமேற்றாமல், வழக்கமாக ஏற்றப்படும் உச்சி பிள்ளையார் கோவில் அருகேவுள்ள தீபத் தூணில் கோவில் நிர்வாகம் தீபம் ஏற்றியது.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல், வழக்கமான இடத்தில் தீபமேற்றியது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று வருத்தம் தெரிவித்து, அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனிடையே, மதுரை ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணையா் எஸ். ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி. வினய், கோவில் செயல் அலுவலா் செல்வி ஜி உள்ளிட்டோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி மனுதாரர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், அவமதிப்பு மனுக்களை இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு ஆஜராகி இன்று காலை கோரிக்கை வைத்தார்.

அவரின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அனைத்து வழக்குகளை நாளை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று தெரிவித்தனர்.

summary

Thiruparankundram cases to be heard tomorrow! Supreme Court announces!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.