முகப்பு

மதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்

மதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிக்கப்படுவதாக திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தர்வு

19 வினாடிகள் முன்பு
மதுரை ஆட்சியரின் முதற்கட்ட அறிக்கை நிராகரிப்பு: திருப்பரங்குன்றம் வழக்கில் உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் - file photo
பகிர்:

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள தூணில் தீபம் ஏற்றப்படாதது ஏன் என்பது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முதல்நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பதாக உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், தமிழக தலைமைச் செயலர் நேரில் ஆஜராகவும், விவகாரம் குறித்து பிரமாணப் பத்திரிகை தாக்கல் செய்யவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியரின் அறிக்கையில், மலையில் உள்ள தூணில் விளக்கேற்றாத விவகாரத்தில் கோயில் நிர்வாகத்தின் மீது பழிசுமத்த ஆட்சியர் முயற்சிப்பதாகவே தெரிகிறது.

Advertisement

Advertisement

உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதுடன், உத்தரவை செயல்படுத்தாததில் மனவருத்தம் ஏற்படுகிறது.

நவ. 20 உத்தரவை செயல்படுத்தாத விவகாரத்தில், மதுரை மாவட்ட நிர்வாகத்தில் குழப்பங்கள் இருக்கின்றன. உத்தரவை செயல்படுத்துவதில் மெத்தனப்போக்கு இருந்துள்ளது மனவேதனை அளிக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாது அரசமைப்புச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும். நீதிமன்ற உத்தரவை மெத்தனமாக கையாளும்போது பார்த்துக்கொண்டிருக்க முடியாது. எந்தவொரு அதிகாரத்துக்கும் உச்ச நீதிமன்றம் அடிபணியாது. நீதிமன்றத்தின் உத்தரவை அதுவே மாற்றும்வரை அதை மீற முடியாது என்றும் அடுக்கடுக்கான கருத்துகளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

summary

Supreme Court rejects Madurai Collector’s preliminary report in Tirupparankundram case

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.