முகப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது..

19 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை செயல்படுத்தினீர்களா? உச்ச நீதிமன்றம் கேள்வி
திருப்பரங்குன்றம் - ENS
பகிர்:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூண் பகுதியில் விளக்கேற்ற நாங்கள் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தினீர்களா? ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு, ஆம் செயல்படுத்தினோம் என பதிலளித்துள்ளது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு.

உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தி இருந்தால் எதற்காக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படுகிறது? என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்புக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

மேலும் தமிழக தலைமைச் செயலர், டிஜிபி, ஐஜி பெயர்களை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதி, இன்றைய தினமே நாங்கள் சில முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறோம் என்றனர்.

Advertisement

Advertisement

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில், எஸ்பி என்று கூறும் மத்திய தொல்லியல் துறை அவர் யார் என்று கூறவில்லை, ஆலோசிக்கவில்லை, ஆய்வு செய்ய அனுமதிக்கவில்லை என்று மத்திய தொல்லியல் துறை சொல்வதெல்லாம் பொய். மலை உச்சியில் தீபம் ஏற்றுவது பற்றி அறங்காவலர் குழு மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு உத்தரவிட முடியாது என்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பு வழக்குரைஞர் கூறினார்.

இதுபோன்ற நடவடிக்கைகள் அரசமைப்பு குழப்பத்தை ஏற்படுத்திவிடும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின்போது திருப்பரங்குன்றம் மலையில் நாளை தீபம் ஏற்ற ஆணையிட வேண்டும் என்று தொல்லியல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது. அவ்வாறு உத்தரவிட்டால், மலை முழுவதும் சிஆர்பிஎஃப் படை நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியது.

மேலும், திருப்பரங்குன்றம் தூண் பகுதியை பார்வையிட அனுமதிக்கவில்லை என தொல்லியல் துறை குற்றச்சாட்டுகளை முன் வைத்த போது, இல்லை, தூண் பகுதியை தொல்லியல் துறையினர் பார்வையிட்ட புகைப்படம் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது.

மேலும், தொல்லியல் துறை அதிகாரிகளை தூண் அருகே செல்ல அனுமதிக்கவில்லை என்று சொல்வது பொய், மொட்டைக் கடுதாசி போல குற்றச்சாடடை முன்வைக்கிறது தொல்லியல் துறை எனவும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது.

summary

Did you implement the order regarding the Thiruparankundram issue? Supreme Court asks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.