FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

காஜல் அகர்வாலுடைய குழந்தையின் பெயர் இதுதான்: கணவர் அறிவிப்பு

நடிகை காஜல் அகர்வாலுடைய குழந்தையின் பெயரை அவரது கணவர் கௌதம் அறிவித்துள்ளார். 

Updated On : 20 ஏப்ரல் 2022, 2:50 pm IST
பகிர்:

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள நிலையில், குழந்தையின் பெயரை அவரது கணவர் அறிவித்துள்ளார். 

நடிகை காஜல் அகவர்வாலுக்கு நேற்று (ஏப்ரல் 19) ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவரது கணவர் கௌதம் கிச்சுலு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தைக்கு 'நீல் கிச்சுலு' எனப் பெயரிட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

அவரது பதிவில் 'எங்கள் மகனான நீல் கிச்சுலுவின் பிறந்துள்ளதை  அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். காஜல் அகர்வாலின் தங்கையும் நடிகையுமான நிஷா, ''நேற்று காலை மிகவும் சிறப்பானதாக இருந்தது. எங்கள் உலகை இன்னும் அழகாக்கும் விலைமிதிப்பற்ற சிறிய உயிரை வரவேற்றோம். 

Advertisement

Advertisement

அவனது அழகான சிரிப்பு, மின்னுகின்ற கண்கள் ஆகியவை எங்கள் உலகத்தை ஒளிரச் செய்தன. அவனின் சிறிய அழகான பாதம், கைகள், சிறப்பான நகங்கள் ஆகியவை அழகு'' என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

காஜல் அகர்வாலுக்கும் கௌதம் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. கர்ப்பமாக இருந்த காஜல் அகர்வால் அவ்வப்போது தனது அனுபவங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments