நானி மற்றும் நஸ்ரியாவின் 'அடடே சுந்தரா' - வெளியானது டீசர்
நானி மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'அடடே சுந்தரா' பட டீசர் வெளியானது.
தமிழில் 'நான் ஈ', 'ஆஹா கல்யாணம்', 'வெப்பம்' உள்ளிட்ட படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நானி. தெலுங்கில் முன்னணி நடிகரான நானி வித்தியாசமான படங்களின் மூலம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தற்போது நடித்துள்ள படம் 'அன்டே சுந்தரானிகி'. இந்தப் படம் தமிழில் 'அடடே சுந்தரா' என்ற பெயரில் வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இது நஸ்ரியாவுக்கு முதல் தெலுங்கு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | என்னது! கண்தத்தாவா?' குழந்தை மொழியில் தனது மகள் பேசும் விடியோவை பகிர்ந்த சதீஷ்
Advertisement
Advertisement
இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு மதத்தை சேர்ந்தவர்கள் காதலிப்பதன் காரணமாக உருவாகும் பிரச்னைகளை இந்தப் படம் பேசுவதாக தெரிகிறது.
இந்தப் படத்தில் ரோகினி, நதியா, அழகம் பெருமாள், ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விவேக் சாகர் இந்தப் படத்துக்கு இசையமைக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஆத்ரேயா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.