முகப்பு
செய்திகள்

துணிவு படத்தின் ‘சில்லா சில்லா' பாடல் வெளியானது!

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா' பாடல் இன்று வெளியானது.

Updated On : 9 டிசம்பர் 2022, 7:25 pm IST
பகிர்:

துணிவு படத்தில் இடம்பெற்றுள்ள ‘சில்லா சில்லா' பாடல் இன்று வெளியானது.

நடிகர் அஜித் குமார், இயக்குநர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் 'துணிவு'. பஞ்சாபில் நடைபெற்ற வங்கி்க் கொள்ளையை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. 

இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். மஞ்சு வாரியர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள அஜித் அறிமுக பாடலான ‘சில்லா..சில்லா’ பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சில்லா..சில்லா இப்பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். பாடல் வெளியானதை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments