வோக்ஹார்ட் லாபம் 11% சரிவு!
வோக்ஹார்ட் லிமிடெட், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 11% சரிந்து ரூ.73 கோடியாக இருப்பதாக அறிவித்தது.
புதுதில்லி: முன்னணி மருந்து நிறுவனமான வோக்ஹார்ட் லிமிடெட், செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் கிட்டத்தட்ட 11 சதவீதம் சரிந்து ரூ.73 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், நிறுவனம் வரிக்குப் பிந்தைய லாபமாக ரூ.82 கோடியை ஈட்டியிருந்தது.
நிதியாண்டின் 2வது காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் ரூ.969 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இது ரூ.782 கோடியாக இருந்தது.
மதிப்பாய்வுக்குட்பட்ட காலாண்டில், நிறுவனத்தின் மொத்த செலவுகள் கடந்த ஆண்டு ரூ.712 கோடியாக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் இது ரூ.907 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
Advertisement
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.180 கோடியாக உயர்ந்துள்ள நிலையில் கடந்த ஆண்டின் முதல் பாதி காலகட்டத்தில் நிறுவனம் ரூ.26 கோடி நிகர இழப்பை சந்தித்தது.
Wockhardt Ltd on Monday reported a nearly 11 per cent decline in consolidated net profit.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.