’பிச்சைக்காரன் 2’ வெளியீடு எப்போது? புதிய அப்டேட்
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் ‘பிச்சைக்காரன் 2’ வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.
இதையும் படிக்க | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் சமந்தா?
Advertisement
Advertisement
இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படம் அடுத்தாண்டு கோடைக்கால விடுமுறையில் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில், தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் உரிமத்தை ஸ்டார் குழுமம் கைப்பற்றியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.