ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துக்காக களமிறங்கும் அனிருத்: புது பாடல் குறித்து வெளியான விடியோ
ஐஸ்வர்யா இயக்கும் பாடலை அனிருத் பாடவிருக்கிறார்.
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருவரின் பிரிவுக்கான காரணங்கள் என பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனிப் பாடல் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில் தமிழில் இந்தப் பாடலை அனிருத் பாடவிருக்கிறார். அதே போல தெலுங்கில், சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும் பாடவிருக்கின்றனர்.
இதையும் படிக்க | கவர்ச்சி படங்களைப் பகிர்ந்து சமூக வலைதளங்களை சூடேற்றிய மீரா ஜாஸ்மீன்
Advertisement
Advertisement
அங்கித் திவாரி என்பவர் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். பே ஃபிலிம்ஸ் இந்த விடியோவை தயாரித்துள்ளது. விரவைல் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. இதன் ஒரு பகுதியாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.